காவலர்களுக்கு யோகா பயிற்சி

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மகா யோகம் மையம் சார்பில் காவலர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கு பெற்று புத்துணர்ச்சி பெற்றனர்.

திருப்பத்தூர் தனியார் திருமண மஹாலில் மகா யோகம் மையத்தின் சார்பில் திருப்பத்தூர், சிங்கம்புணரி எஸ். எஸ். கோட்டை, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட 13 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

யோகா ஆசிரியர் ரமேஷ் ரிஷி குழுவினர் பயிற்றுவிக்க டிஎஸ்பி அண்ணாதுரை, ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து புத்துணர்ச்சி அடைந்தனர். காவலர்கள் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் உள்ளனர். அவற்றைப் போக்கும் விதமாக இந்த யோகாசனப் பயிற்சி நடைபெற்றதாக டிஎஸ்பி அண்ணாதுரை தெரிவித்தார். முன்னதாக அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.