உலகத் தமிழ்க் கழகம் அமைக்கப்பட்ட நாள்
1774 – அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு ராணுவத்தினரின் அச்சுறுத்தலால் யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
1788 – ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
1805 – மெச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் சேதமடைந்தது.
1837 – பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.
1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.
1935 – அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜெர்சியில் அறிமுகப்படுத்தினார்.
1937 – சோவியத் ஒன்றியத்தில் எட்டு ராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் இத்தாலியில் ஜெனோவா மற்றும் டூரின் நகர்கள் மீது குண்டுகளை வீசின.
1940 – இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதல் முறையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.
1963 – தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
1968 – உலகத் தமிழ்க் கழகம் தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டது
1981 – ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 பலியாகினர்.
2002 – அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசால் அறிவிக்கப்பட்டார்.
2004 – நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை நெருங்கிச் சென்றது.
2007 – கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் 118 பேரும் தெற்கு சீனாவில் 66 பேரும் கொல்லப்பட்டனர்.
You must log in to post a comment.