இன்று நிலத்தடியில் வாழ்பவர்கள் தினம்

-கண்ணன் சேகர்

🟢இன்றைய தினத்தில்….14-05-2020


1264 – இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்.
1610 – பிரான்ஸின் நான்காம் ஹென்றி மன்னன் கொலை செய்யப்பட்டார். பதின்மூன்றாம் லூயி முடி சூடினார்.
1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவனது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்ஸின் மன்னன் ஆனார்.
1796 – பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.
1811 – பராகுவாய் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
1861 – ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் வீழ்ந்தது.
1879 – 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.
1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிஸில் தொடங்கின.
1931 – சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் சுட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
1940 – இரண்டாம் உலகப் போரில் நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1943 – இரண்டாம் உலகப் போரில் ஆஸ்திரேலியாவின் செண்டோர் என்ற மருத்துவக் கப்பல் குயின்ஸ்லாந்து அருகே ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் கொல்லப்பட்டனர்.
1948 – இஸ்ரேல் தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசை அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின.
1955 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உள்பட எட்டு நாடுகள் சேர்ந்து வார்சா ஒப்பந்தம் எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கையெழுத்திட்டன.
1973 – ஸ்கைலாப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் சட்டர்ன் 5 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1976 – யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

இன்று நிலத்தடியில் வாழ்பவர்கள் தினம்


சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு தீர்வுதான் என்ன என்று யோசித்து யோசித்து மேலை நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்.
அதாவது, பூமிக்கு மேலே வாழாமல் பூமிக்குக் கீழே வாழ்ந்தால் என்ன என்பதுதான் அது! இதனால் உலகுக்கு அவர்கள் அறிவித்த கொள்கை தான் ‘நிலத்தடி வாழ்க்கை முறை’. இது நிலவறை வாழ்க்கை முறை என 1974-ல் இது இயக்கமாகவே தொடங்கியது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.