உலக சுற்றுச்சூழல் நாள்

சிறப்பு நாள்

உலக சுற்றுச்சூழல் நாள்
டென்மார்க் – அரசியல் நிர்ணய நாள்
சேஷெல்ஸ் – விடுதலை நாள்


பிற நிகழ்வுகள்

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் வெர்ஜீனியாவின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளைத் தோற்கடித்து 1000 பேரை சிறைப்பிடித்தனர்.
1900 – இரண்டாம் போவர் போரில் பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.
1912 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் கியூபாவில் இறங்கினர்.
1946 – சிக்காகோவில் உணவகம் தீப்பிடித்ததில் 61 பேர் பலியாகினர்.
1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1959 – சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
1967 – இஸ்ரேலிய வான்படையினர் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகியவற்றின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1968 – ஐக்கிய அமெரிக்காவின் அரசுத் தலைவருக்கான வேட்பாளர் ராபர்ட் கென்னடி பாலஸ்தீனர் ஒருவனால் சுடப்பட்டார். இவர் மறுநாள் உயிரிழந்தார்.
1969 – அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மாஸ்கோவில் தொடங்கியது.
1974 – ஈழப்போர்: சிவகுமாரன் உரும்பிராயில் காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி இறந்த ஈழப் போராளியாவார்.
1977 – செஷெல்சில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1977 – முதலாவது தனிக்கணினி ஆப்பிள் II விற்பனைக்கு விடப்பட்டது.
1979 – இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமையாக்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.