குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்

இன்றைய சிறப்பு

குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு நாள்  உலகம் முழுவதும் ஜூன் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாளில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது 2002-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் – விடுதலை நாள்
ரஷ்யா – ரஷ்ய நாள்

பிற நிகழ்வுகள்

1429 – ஜோன் ஒஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு ராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றின.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய ராணுவத் தளபதி தாமஸ் கேஜ் மசாசுசெட்சில் ராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். ஆயுதங்களை ஒப்படைக்கும் அனைத்து குடியேற்றக்காரர்களுக்கும் மன்னி்ப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

1830 – 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்தது முதல் பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் தொடங்கியது.

1898 – பிலிப்பைன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1899 – ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 117 பேர் உயிரிழந்தனர்.

1902 – ஆஸ்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
1934 – பல்கேரியாவில் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
1935 – பொலீவியாவுக்கும் பராகுவேவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் ஜெர்மனியரிடம் சரணடைந்தன.
1943 – நாசி ஜெர்மனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.


1964 – தென்னாப்பிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
1967 – சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துக்குள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவே.
1987 – மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை அறிவிக்கப்பட்டது.
1990 – ரஷ்யக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து ரஷ்யாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.
1991 – போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
1991 – மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1999 – நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.
2006 – கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.