உலக காற்று தினம்

சிறப்பு நாள்

டென்மார்க் – கொடி நாள்
உலக காற்று தினம் (World Wind Day)

பிற நிகழ்வுகள்

கிமு 763 – மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்று பதிவு செய்யப்பட்டது.
923 – பிரான்சின் முதலாம் ரொபேர்ட் மன்னர் கொல்லப்பட்டார்.
1184 –நார்வேயின் ஐந்தாம் மாக்னஸ் மன்னர் ஃபிம்ரெயிட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார்.
1246 – இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் ஆஸ்திரியாவின் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.
1389 – கொசோவோவில் இடம்பெற்ற போரில் ஒட்டோமான் படைகள் செர்பியர்களையும், பொஸ்னியர்களையும் தோற்கடித்தனர்.
1667 – சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்ற பிரெஞ்ச் மருத்துவர் முதன் முதலில் மனித இரத்த மாற்றீட்டை செயற்படுத்தினார்.
1752 – மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்ஜமின் பிராங்கிளின் கண்டறிந்தார்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தரைப்படைத் தளபதியாக நியமனம் பெற்றார்.
1808 – ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னராக முடி சூடினார்.
1836 – ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்காவின் 25-ஆவது மாநிலமானது.
1844 – ரப்பர் பதப்படுத்தும் முறை (vulcanization) சார்ல்ஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வெர்ஜீனியாவின் பீட்டர்ஸ்பேர்க் நகர் அமெரிக்கப் படைகளின் முற்றுகைக்குள்ளானது.
1904 – நியூயார்க்கில் ஜெனரல் ஸ்லோகம் என்ற கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 1021 பேர் கொல்லப்பட்டனர்.
1911 – ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
1938 – பிரித்தானியாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாக்களைக் கண்டுபிடித்தார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சாய்ப்பான் தீவை கைப்பற்றினர்.
1954 – ஐரோப்பிய உதைப்பந்தாட்டக் கூட்டமைப்பு யூஏஃபா சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது.
1996 – ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் 200 பேர் காயமடைந்தனர். நகரின் மத்திய பகுதி பெரும் சேதத்துக்குள்ளானது.
2007 – உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள ரயில்வே சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.