இன்று உலக அகதிகள் நாள்

சிறப்பு நாள்

உலக அகதிகள் நாள்
அர்ஜெண்டைனா – கொடி நாள்

பிற நிகழ்வுகள்

1631 – பால்ட்டிமோர் என்ற ஐரிய பகுதி அல்ஜீரிய கடற்கொள்ளைக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.
1756 – கொல்கத்தாவில் பிரித்தானியப் படைவீரர்களை நவாப்புகள் சிறை வைத்தனர்.

1791 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் 16-ஆம் லூயி மன்னனும் அவனது குடும்பமும் வரெனெஸ் நகருக்குத் தப்பியோடினர்.
1837 – விக்டோரியா பிரித்தானியாவின் அரசியாக முடி சூடினார்.
1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி 1857-இல் முடிவுக்கு வந்தது.
1862 – ருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.
1863 – மேற்கு வெர்ஜீனியா ஐக்கிய அமெரிக்காவின் 35-ஆவது மாநிலமாக சேர்க்கப்பட்டது.
1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் தொடங்கினார்.
1900 – பொக்சர் படைகள் பீக்கிங்கில் நூற்றுக்கணக்கான ஐரோப்பியர்களைக் கொன்றன.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பைன் கடல் போர் அமெரிக்கக் கடற்படையின் பெருவெற்றியில் முடிவடைந்தது.
1960 – மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலைப் பெற்றன.
1978 – கிரீசில் 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது.
1990 – யுரேகா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
2001 – பாகிஸ்தானின் அதிபராக பர்வேஸ் முஷாரஃப் பதவியேற்றார்.
2003 – விக்கிமீடியா அமைப்பு உருவானது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.