வின்சென்ட் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமரான நாள்

1503 – கிறிஸ்டோபர் கொலம்பஸ் கேமான் தீவுகளை அடைந்து அங்கிருந்த கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.
1612 – மன்னன் ஷாஜகான், மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான்.
1768 – மூன்றாம் ஜார்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜான் வில்க்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.
1774 – பிரான்சின் மன்னனாக 16-ஆம் லூயி முடிசூடினான்.
1796 – ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டன.
1796 – பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான்.
1810 – அர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
1865 – அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைப்பற்றப்பட்டார்.
1865 – அமெரிக்கக் கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தளபதியான வில்லியம் குவாண்ட்ரில் என்பவரை கென்டக்கி என்ற இடத்தில் தாக்கி படுகாயப்படுத்தினர். இவர் ஜூன் 6 இல் இறந்தார்.
1871 – பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.
1877 – ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1908 – அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனியின் முதலாவது குண்டு இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் விழுந்தது.
1940 – வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமரானார்.
1941 – இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனியின் வான்படையின் தாக்குதலில் லண்டனில் கீழவை நாடாளுமன்றம் (House of Commons) சேதத்துக்குள்ளாகியது.
1946 – ஜவாஹர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.
1993 – தாய்லாந்தில் விளையாடுப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1994 – நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
1997 – ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.