வாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை

வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள் – பகுதி 7

இப்போதெல்லாம் நகர்புறங்களைக் காட்டிலும் புறநகர்ப் பகுதிகளில் மனைகள் அமைத்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. அவற்றின் விலை நகர்புறத்துக்குள் வாங்குவதைக் காட்டிலும் சற்றும் குறைவாக இருப்பதால் மனை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் இத்தகைய மனைகளை தேர்வு செய்வதுண்டு.

அப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை:

நீங்கள் தேர்வு செய்யும் மனை சதுர வடிவிலோ, செவ்வக வடிவிலோ (நீண்ட சதுரம்) இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.  அதேபோல் நீள, அகலங்களின் விகிதம் 1-க்கு 2-க்கு மேல் இன்றி இருக்க வேண்டும்.

வித்தியாசமான கோணங்களில் மனைகள் இருந்தால் அவற்றை விலை குறைவாக இருந்தாலும் வாங்காதீர்கள்.

மனையின் முன்பக்கம் அகலமாகவும், பின்பக்கம் குறுகியிருந்தாலும் வாங்காதீர்கள்.

முன்பக்கத்தைக் காட்டிலும் பின்பக்கம் அகலமாக இருக்கும் மனைகளாக இருந்தால் கிழக்கு-வடக்குப் பக்கங்களில் சாலை இருந்தால் வாங்காதீர்கள்.

மனைகளின் தென்கிழக்கு-வடமேற்குமூலைகள் நீண்டிருந்தால் அது சரியில்லாத மனைதான். இருப்பினும் அதை வாங்கி திருத்தம் செய்ய முடியும்.

அதேபோல் மனையின் வடகிழக்கு, ஈசானியம் வெட்டப்பட்டிருப்பது போன்ற அமைப்பு உள்ள மனையை வாங்கி திருத்தி உபயோகிக்க முடியும்.

மனையின் வடகிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு மூலைகள் வளர்ந்திருந்தால் சற்று தரமற்ற மனைதான். இருப்பினும் அதையும் வாஸ்து முறைப்படி திருத்தி கட்டடம் கட்ட முடியும்.

நான்கு மூலைகள் உள்ள மனையில் வடகிழக்கு வெட்டப்பட்டோ, தென்மேற்கு விரிவடைந்தோ அல்லது தென்மேற்கைக் காட்டிலும் வடகிழக்கு நீளம் குறைந்தோ காணப்பட்டால் அவற்றை சீர்செய்து பயன்படுத்த முடியும்.

மனைகளின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

மனை வாங்கியப் பிறகு அந்த மனையின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மனைகளில் நைருதி என்னும் தென்மேற்குப் பகுதி உயர்ந்திருக்க வேண்டும்.

ஈசானிய மூலை வடகிழக்குப் பகுதி மற்ற 3 பக்கங்களைக் காட்டிலும் தாழ்ந்திருக்க வேண்டும்.

வடமேற்குப் பகுதியானது தென்கிழக்குப் பகுதியைக் காட்டிலும் தாழ்வாக இருக்கும் சீர்செய்துகொள்ள வேண்டும்.

இவற்றை செய்ய சொல்வதற்குக் காரணம் வாஸ்து சாஸ்திரத்தில், மனை வடக்கில் இருந்து தெற்கில் தாழ்ந்து இருந்தால் குடும்பத்தில் எதிர்பாராத இறப்பு சம்பவங்கள் நேரிடும்.

மனை தென்மேற்காக வடகிழக்கில் இருந்து சரிவாக தாழ்ந்திருந்தால் சொத்து விரயம், வருவாய் இழப்பு, விபத்துக்களை சந்திக்க நேரிடும்.

மனை மேற்கு நோக்கி சரிவாக இருக்குமானால் ஆண் வாரிசுகள் தங்காது. சொத்து விரயம் ஏற்படும்.

வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி மனை தாழ்ந்திருக்குமானால் விபத்துக்கள் ஏற்படும்.

மனை வடமேற்காக தாழ்ந்திருந்தால் அந்த வீட்டில் உரிமையாளர் குடியிருக்க முடியாமல் போய்விடும்.

எனவே, மனைகளின் தரைமட்டம் தெற்கு, மேற்குப் பகுதிகள் உயர்ந்திருக்க வேண்டும். வடகிழக்கில் தரைமட்டம் தாழ்ந்திருக்க வேண்டும்.

தென்கிழக்கு-வடமேற்கு பகுதிகள் உயர்ந்திருக்க வேண்டும். வடப்பகுதி தென்பகுதியைக் காட்டிலும் தாழ்ந்திருக்க வேண்டும்.

அதேபோல் மேற்கு பக்கத்தைக் காட்டிலும் கிழக்கு பக்கமும் தாழ்வாக இருக்க வேண்டும்.

(அடுத்து வருவது – தெருகுத்து மனைகளும் அவற்றில் நல்ல பலன்களை தருபவையும், தீய பலன்கள் தருபவையும்…)

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.