ஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா?

வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள் – பகுதி 5

வாஸ்து புருஷன் எப்போதுமே வடகிழக்கு மூலையில் தலைமையை வைத்திருப்பதாகவும், தனது காலை தென்மேற்கு மூலையான நைருதி திக்கிலும் நீட்டிருப்பதாகவும் ஐதீகம். அவரது வலது கை வடமேற்கு திசையான வாயு மூலையிலும், இடது கை தென்கிழக்கு திசையான ஆக்கியேன மூலையிலும் வைத்திருக்கிறார்.
இதை வைத்துதான் ஒரு மனையில் வீடு கட்டும்போது கதவுகள், ஜன்னல்கள், தரைப் பகுதி, சீலிங் போன்றவற்றை வைப்பது வாஸ்துவில் கடைபிடிக்கப்படுகிறது. இதுதான் ஸ்திர வாஸ்து ஆகும்.


தினமும் வாஸ்து புருஷனின் பார்வை திக்குகள் மாறும். அதுவே நித்திய வாஸ்து என அழைக்கப்படுகிறது. நள்ளிரவு தொடங்கி மறுநாள் இரவு 12 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தலா 3 மணி நேரத்துக்கு ஒருமுறை வாஸ்து புருஷனின் பார்வை மாறுகிறது.
இந்த நித்ய வாஸ்து கடைக்கால் போடும்போதும், இல்லத்தில் பிரதான வாயில் கதவு வைக்கும்போதும், கிரகப் பிரவேசம் செய்யும்போது பார்க்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

இதுவரை வாஸ்து புருஷனின் அடிப்படை குறித்து அறிந்துகொண்டிருக்கிறோம். இதுதான் வாஸ்து பார்த்து வீடுகள், கட்டடங்கள் கட்டுவதற்கு அடிப்படை.
அடுத்து வாஸ்து சாஸ்திரத்தை பார்த்து எத்தகைய பணிகளைத் தொடருவது, வீட்டின் எல்லைகள் அளவு, வீட்டில் அமையும் அறைகள் அளவு, எத்தகைய திக்கில் அமைந்துள்ள மனைக்கு எத்தகைய வடிவில் கட்டடம் கட்டப்பட வேண்டும், முறைப்படி வாஸ்து புருஷனை எப்படி பூஜிக்க வேண்டும். கட்டடம் அஸ்திவாரம் போடும் முன் என்ன செய்ய வேண்டும். காலி மனையில் வீடு கட்டுவதற்கு முன் செய்ய வேண்டியதும், பார்க்க வேண்டியதும் எவை, புதிதாக மனையோ, வீடோ வாங்க முற்படுவோர் எவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும், தற்போது சொந்தமாக உள்ள வீட்டின் அமைப்பில் வாஸ்து குறைபாடு இருக்கிறதா என்பதை நாமே அறிந்துகொள்வதற்கான அடிப்படை, அப்படி ஏதேனும் குறைபாடு இருந்தால் அவற்றை நாமே சரிசெய்வது எப்படி, ஆழ்துளை கிணறு எங்கே அமைய வேண்டும். செப்டிக் டேங்க் எந்த இடத்தில் அமைய வேண்டும். முதல்மாடி, இரண்டாவது மாடி கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எவை, பூஜை அறை, குளியல் அறை, படுக்கை அறை, சமையல் அறை ஆகியன எந்த திக்கில் அமைய வேண்டும், அப்படி தற்போது வசிக்கும் வீட்டில் அமையாமல் போயிருந்தால் மாற்று ஏற்பாடு என்ன செய்ய வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்கள் இனிவரும் பகுதிகளில் இடம்பெறவுள்ளன.


(அடுத்து வருவது புதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?)

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.