பிலிப்பைன்ஸ் தேசிய கொடி நாள்

சிறப்பு நாள்

அசர்பைஜான், ஆர்மீனியா – குடியரசு நாள்
பிலிப்பைன்ஸ் – தேசிய கொடி நாள்

பிற நிகழ்வுகள்

1503 – ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1588 – 30 ஆயிரம் பேருடன் ஸ்பானிய ஆர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதுவதற்காக ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து தொடங்கின.
1737 – வீனஸ் கோள் மெர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜான் பேவிஸ் என்ற வானியலாளர் கண்டறிந்தார்.
1905 – ரஷ்ய-ஜப்பானியப் போரின்போது சூஷிமா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ரஷ்யக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது.
1937 – கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.
1940 – இரண்டாம் உலகப் போரில் பெல்ஜியம் ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1942 – இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஹைட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1800 பேரைப் படுகொலை செய்தது.
1958 – இலங்கையின் ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
1964 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
1974 – வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிவடைந்தது.
1987 – மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் ரெஸ்ட் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
1991 – எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எத்தியோப்பிய மக்கள் புரட்சி ஜனநாயக முன்னணியினர் கைப்பற்றினர்.
1995 – ரஷ்யாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரை பலியாகினர்.
1998 – பாகிஸ்தான் 5 அணு ஆயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.