வைரலாகும் அஜீத்தின் புகைப்படம்

சென்னை: நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படத்தில் இடம்பெறுவதற்காக எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்து வரும் படம் வலிமை. இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அண்மையில் நடந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் காட்சியில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனாலும் மறுநாளை அவர படப்பிடிப்பில் பஙகேற்றார். அவருக்கு சிறுகாயம் ஏற்பட்டதாக படப்பிடிப்பு குழுவும் உறுதி செய்தாலும் அது தொடர்பாக எந்த புகைப்படமும் வெளியாகவில்லை.

இச்சூழலில் அப்படத்தில் விபத்து ஏற்படும் முன் அஜித் நடித்த ஸ்டண்ட் காட்சியில் இடம்பெற்ற பைக் வீலிங் செய்யும் காட்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.