தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு

சென்னை: மத்திய, மாநில அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவ்வப்போது நாளிதழ்களில் வரும் வேலைவாய்ப்புகளில் மிக முக்கியமானப் பணிகள் தொடர்பான தொகுப்பு விடியோ இது.

நாட்டில் கடந்த இரு மாதங்களாக கொரோனா பாதிப்புகளின் தாக்கம் மெல்ல குறைந்துள்ளதால், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் காலிப் பணியிடங்கள் தனியார் நிறுவனங்களிலும் காத்திருக்கின்றன. அவை தற்காலிகப் பணியாக இருப்பினும் தற்போதைய சூழலில் அவை நம் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். இருப்பினும் மத்திய, மாநில அரசுப் பணிகள்தான் வேலைவாய்ப்புகளை தேடுவோரின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களில் பணிக்கு சேருவோருக்கு பணிச் சுமை, தனிமனித ஆளுமை, சகிப்புத் தன்மைக்கு அப்பாற்பட்ட கட்டுப்பாடுகள், பணிக்குரிய ஊதியம் வழங்காமை, பணி பாதுகாப்பின்மை போன்றவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பான பணிகளை விரும்புவோர் நாடுவது மத்திய, மாநில அரசுப் பணிகளாகவே உள்ளன.

தனியாரிடம் பணிக்கு சேருவதற்கு முன்பு சுயத்தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை இன்றைய இளைஞர்கள் அலசுவது சாலச்சிறந்தது என்கின்றனர் கல்வியாளர்கள்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.