சின்னத்திரை படப்பிடிப்பு – 60 பணியாளர்களுடன் நடத்த அனுமதி
சென்னை: தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பை அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு நடத்துவதற்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத் திரை படப்பிடிப்பை நடத்தலாம். சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி தேவை. பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்புக்கும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெற வேண்டும். படப்பிடிப்பை மே 31 முதல் நடத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.