சின்னத் திரை சித்ரா தற்கொலை ஏன்? போலீஸார் தீவிர விசாரணை

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் ‘முல்லை’ கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சித்ரா தற்கொலை, தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது தற்கொலை தொடர்பாக போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை சித்ராவுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவர் சின்னத் துறையுலகில் பல தொலைக்காட்சி சேனல்களில் பணிபுரிந்தவர் என்பதோடு, தற்போது விஜய் தொலைக்காட்சியில் வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவரது முல்லை கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றதாகும். மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர். அன்று முதல் இதுவரை அவர் சின்னத்துறை உலகில் கொடிக்கட்டி பறந்து வந்தவராக விளங்கினார். புகழின் உச்சியை நோக்கி பயணம் செய்த அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

சித்ராவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சித்ராவின் வீடு திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ள நிலையில், புறநகர் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பது சிரமமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.  இந்நிலையில் அவரோடு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலதிபர் ஹேமந்த் தங்கியுள்ளார். சித்ரா தற்கொலையுண்டபோது வருங்கால கணவரான ஹேமந்த் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தது தெரியவந்தது.

அவர்தான் முதலில் ஹோட்டல் நிர்வாகத்திடம் சித்ரா தனது அறைக்குள் பூட்டிக்கொண்டு திறக்க மறுப்பதாக தகவல் அளித்துள்ளார். மாற்று சாவி மூலம் அறையை திறந்து உள்ளே சென்றபோது சித்ரா புடவையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளார்.

நசரத்பேட்டை போலீஸார் ஹேமந்திடம் நடத்திய முதல்கட்ட விசாரணையின்போது, சித்ரா அதிகாலை 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வந்த்தாகவும், குளிக்கப்போவதால் வெளியே காத்திருக்க சொன்னதாகவும், அதனால் தான் வெளியே வந்துவிட்டதாகவும், பின்னர் அறைக் கதவை பூட்டிக் கொண்ட சித்ரா திறக்க மறுத்துவிட்டதாகவும், அதைத் தொடர்ந்தே ஹோட்டல் நிர்வாகத்தின் மாற்று சாவி மூலம் கதவை திறந்து அறைக்குள் சென்றதாகவும் கூறியுள்ளார். சம்பவத்தை அறிந்த சக நடிகர், நடிகைகள் சித்ரா உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை மையத்துக்கு வந்தனர்.

சித்ராவின் நண்பர்கள் #vjchithra என்ற ஹேஷ்டேக்கில் “நம்பவே முடியாத ஒன்று”, “வாய்ப்பே இல்லை”‘என்னாச்சு சித்ரா போன்ற அதிர்ச்சி கேள்விகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.