டி.எஸ். பாலையா நினைவு நாள்

டி. எஸ். பாலையா தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் நடிகர். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும மேல் தமிழ்த் திரையுலகில் அவர் கோலோச்சினார். காதலிக்க நேரமில்லைஊட்டி வரை உறவு ஆகிய பாடங்கள் இவரது நகைச்சுவை நடிப்புக்கு மகுடம் சூட்டுபவையாக அமைந்தன.

சிறு வயது முதல நாடகங்களில் நடித்து வந்த அவர், கோவை ஏ.என். மருதாலசம் செட்டியார் தொடங்கிய மனோரமா பிலிம்ஸ்ஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசனின் சதிலீலாவதி கதையை படமாக்க தீர்மானிக்கப்பட்டது.. எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கிய இப்படத்தில் பாலையா நடித்தார். ஆரம்ப காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்து வந்த அவர், மெல்ல பிரபல நகைச்சுவை கலைஞராக மாறினார்..

1937-இல் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதியில் வில்லனாக நடித்தார்.  இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து பம்பாய் மெயில், பி.யு. சின்னப்பாவின் உத்தமபுத்திரன், பூலோக ரம்பை, ஆர்யமாலா, பிருதிவிராஜன், மனோன்மணி, ஜகதலப் பிரதாபன், சாலி வாஹனன், பர்மா ராணி, மீரா ஆகிய படங்களில் அவர் முத்திரை பதித்தார்.

1946–இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த சித்ரா படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். 1947–ம் ஆண்டு பாலையா மீண்டும் கதாநாயகனாக நடித்த படம் செண்பவல்லி. எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படமான ராஜகுமாரியில் பாலையா வில்லனாக நடித்தவர். அப்படத்தில் எம்ஜிஆரும், பாலையாவும் போடும் கத்திச் சண்டை மிகவும் பிரபலம்.

1972-இல் தனது 60-வது வயதில் இதே நாளில் காலமானார் பாலையா.

பிற நிகழ்வுகள்               

1499 – புனித ரோமப் பேரரசின் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிஸ் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.
1812 – வெலிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
1916 – கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
1933 – வைலி போஸ்ட் 15,596 மைல்களை 7 நாள்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.
1962 – நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்ததால் அது அழிக்கப்பட்டது.

1972 – தமிழ்த் திரைப்பட நடிகர் டி.எஸ்.பாலையா மறைந்த நாள்.

1999 – விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.
2003 – ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.
2009 – 21-ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.