தமிழ்நாடு வேளாண் பல்கலை.தொடங்கப்பட்ட நாள்

சிறப்பு நாள்

சமோவா – விடுதலை நாள்
துனீசியா – அரசியல் நிர்ணய நாள்

பிற நிகழ்வுகள்

193 – ரோமப் பேரரசர் டிடியஸ் ஜூலியானஸ் படுகொலையுண்டார்.
1215 – மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான் பெய்ஜிங் நகரைக் கைப்பாற்றினார்.
1485 – ஹங்கேரியின் மத்தாயஸ் வியென்னாவைக் கைப்பற்றினார்.
1533 – ஆன் பொலெய்ன் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினார்.
1605 – மாஸ்கோவில் ரஷ்யப் படைகள் மன்னர் இரண்டாம் ஃபியோதரையும், அவரது தாயாரையும் சிறைப் பிடித்தனர். இவர்கள் பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.
1792 – கென்டகி ஐக்கிய அமெரிக்காவின் 15-ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1796 – டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16-ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1831 – ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார்.
1855 – அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.
1869 – மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார்.
1879 – பிரெஞ்சு இளவரசர் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ-சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டார்.
1910 – ரொபேர்ட் ஸ்காட் தலைமையிலான ஆய்வுக்குழு தென்முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து தொடங்கியது.
1926 – அமெரிக்க நடிகை மார்லின் மன்றோ பிறந்த நாள்.
1941 – ஈராக், பாக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1946 – ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரண தண்டனையில் கொல்லப்பட்டார்.
1959 – நிக்கராகுவாவில் புரட்சி தொடங்கியது.
1962 – நாஜி வதைமுகாம்களை உருவாக்கிய அடால்ஃப் ஐக்குமன் இஸ்ரேலில் தூக்கிலிடப்பட்டார்.
1970 – நடிகர் மாதவன் பிறந்த நாள்.
1971 – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது.

1996 – இந்தியாவின் 6-ஆவது குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி மறைந்த நாள்.
1978 – டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் தொடங்கின..
1979 – 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
1980 – சிஎன்என் ஒலிபரப்புச் சேவையைத் தொடங்கியது.
2001 – நேபாள மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.