தமிழக அரசின் அரசாணைக்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பு

வேலூர்: மாணவர் நலனை கருத்தில் கொண்டு
மேல்நிலை கல்வி பாடத்தில் 4 முதன்மை பாடங்கள் தொடரும் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

மேல்நிலைகல்வி பாடத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நான்கு முதன்மை பாடங்கள் தேர்வு செய்யும் பழைய நட்டைமுறையே தொடரும் என அறிவித்துள்ள தமிழக அரசின் முடிவினை தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்றுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

2020-21ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டுக்கு மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் மற்றம் வேலை வாய்ப்புகள் சுருங்க நேரிடும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக 4 பாடத்தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று மூன்று முதன்மை பாடங்கள் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்து ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடங்கள் தேர்ந்தெடுக்கும் நடைமுறை அனைத்துப்பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று முடிவெடுத்து தமிழக அரசு அறிவிப்பை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்கிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.