திருவேங்கட பெருமாளுக்கு திருமஞ்சன பூஜை

செங்கல்பட்டு, ஜுலை 7: திருவேங்கடமங்கலத்தில் வேங்கட பெருமாளுக்கு திருமஞ்சன பூஜை செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே கேளம்பாக்கம் சாலையில் உள்ள திருவேங்கடமங்கலத்தில் மிக பழைமைவாய்ந்த திருவேங்கட பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சன பூஜை நடந்தது.

முறையாக பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு இறுதியாக பெருமாளுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் அரசு உத்தரவின்படி முகக் கவசத்துடன் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர். சிறப்பு பூஜையில் பங்கேற்றோருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.