திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அத்துடன் முருகன் திருத்தலங்கள் அனைத்திலும் கந்த சஷ்டி விழா தொடக்க பூஜைகள் நடைபெற்றன.


ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டித் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இவ்வாண்டு கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும், காலை 5.30 மணிக்கு சுவாமி ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து காலை 9 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெற்றது.கந்தசஷ்டி விழாவின் 5-ஆம் நாளான 12-ஆம் தேதி வரை நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையைத் தொடர்ந்து மற்ற காலங்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். 6-ஆம் நாளான 13-ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.7-ஆம் நாளான 14-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, 5 மணிக்கு அம்பாள் தபசுக்காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.