தவசிலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

விருதுநகர் : விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் உள்ள ஸ்ரீ தவசலிங்க சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று மஹா கணபதி ஹோமம் பூஜையுடன் தொடங்கியது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் மூளிப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான பழைமை வாய்ந்த ஸ்ரீ தவசிலிங்க சுவாமி கோயில் உள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வ வழிபாட்டு கோயிலான இந்த கோயிலில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

சுற்றுப்பகுதி கிராம மக்களின் ஒத்துழைப்போடு கோயில் திருப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மேற்கொண்டு வருகின்றார். கோயிலில் புதிதாக மூலஸ்தான ராஜகோபுரம் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு, கன்னிவிநாயகர், வேட்டை கருப்பசாமி, சிவன், முருகன், வள்ளி, பார்வதி உட்பட பல்வேறு பரிவார தேவதைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானம், அர்த்த மண்டபம்(கல திருப்பணிகள்) மகாமண்டபம், திருமதில்சுவர், தளம் கல் பதிப்பு பணிகளும் நடைபெற்றன.

கோயில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றார். இந்நிலையில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை மஹா கணபதி ஹோமம் பூஜையுடன் தொடங்கியது. பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள் பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கோயில் சாவிகளை கோயில் நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் கிராம மக்கள் பக்தர்கள் சிற்பி கருப்பசாமி, கோயில் தலைவர் செல்லசாமி, மூளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதிராஜா, விருதுநகர் ஒன்றிய அதிமுக செயலாளரும் கோயில் செயலாளருமான தர்மலிங்கம், கோயில் பொருளாளர் கணியப்பன், அறங்காவலர் குழு உறுப்பினர் வேலாயுதம், உட்பட பலர் பங்கேற்றனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.