திங்கள்கிழமை முதல் டீக்கடைகள் செயல்பட அனுமதி


சென்னை: தமிழகத்தில் சென்னை தவிர பிற இடங்களில் டீக்கடைகள் திங்கள்கிழமை முதல் (மே 11) செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஊரடங்கு வரும் 17-ஆம் தேதி வரை உள்ளது. இச்சூழலில் ஒருசில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி டீக்கடைகள் திங்கள்கிழமை முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அவை காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். பார்சல்களுக்கு மட்டும் அனுமதி. கடையில் நின்று அருந்துவது, அமர்ந்து அமர்ந்து அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. விதியை மீறும் கடைகள் மூடப்படும்.
சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகள் விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6 முதல் மாலை 7 மணி வரை விற்பனை செய்யலாம்.

சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். பிற பகுதிகளில் காலை 10 முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.


பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இந்த புதிய தளர்வுகள் வரும் 11-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.