தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க தடையில்லை

உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை வியாழக்கிழமை முதல் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதால், டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடந்தது.

அப்போது டாஸ்மாக் கடைகளில் சமூக விலகல் பின்பற்றப்படும். பாதுகாப்பு வழங்கப்படும். கொரோனா நோயத் தொற்று பிரச்னை முடிவுக்கு வர நீண்ட நாளாகும் என்பதால் மற்ற கடைகளைப் போல மதுக்கடைகளும் திறக்கப்படுகின்றன.

மது மொத்த விற்பனை செய்யப்பட மாட்டாது. தனிநபர்களுக்கே விற்பனை செய்யப்படும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் மனு மீதான தீர்ப்பை மாலை 5 மணிக்கு ஒத்தி வைத்தது. மாலையில் அளித்த தீர்ப்பில், தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடையில்லை. அதே நேரத்தில், சமூக இடைவெளி, பாதுகாப்பு உள்ளிட்ட வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.