டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

செங்கல்பட்டு, ஜூலை 17: வண்டலூர் அருகே உள்ள கண்டிகை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அகற்றப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இருந்து கேளாம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ளது கண்டிகை கிராமம். இங்கிருந்து வேங்கடமங்கலம் வழியாக பொன்மார் மற்றும் தாம்பரத்திற்கும் செல்லலாம். இந்த சாலை காலை முதல் இரவு வரை ஜிஎஸ்டி சாலை போல் இரு சக்கர வாகனங்கள், கார், லாரி என நாள் தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும். மேலும் இங்கு சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு ஒன்றும், அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் பலதரப்பட்ட கடைகளும் உள்ளன.

இங்கு பள்ளிக்கு மிக அருகாமையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. மதிய வேளையில் இந்த டாஸ்மாக் கடை  திறக்கப்படுவதால் இந்த கடைக்கும் பாருக்கும் வரும் குடிமகன்களின் இருசக்கர  வாகனங்கள் பத்தடி சாலையின் இரு பக்கங்களிலும் அணி வகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும் எதிரே வருவோரை பயத்தில் ஆழ்த்துகிறது. மேலும் கடைகளுக்கு செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போகிறது. இதனால் பள்ளி மாணவர்களின் கவனமும் சிதறடிக்கப்படுகிறது. எனவே அரசு உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.