தமிழகம்: புதிதாக 646 பேருக்கு தொற்று உறுதி

சென்னை: கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,728-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக செவ்வாய்க்கிழமை நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 509 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.