தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்

சிறப்பு நாள்

தமிழீழம் – மாணவர் எழுச்சி நாள்
சுவீடன் – தேசிய நாள்
தென் கொரியா – நினைவு நாள்
குயின்ஸ்லாந்து நாள்

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்

ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட அதன் இலக்கிய வளங்கள் செழுமை மிகுந்ததாக இருக்க வேண்டும். அது மற்ற மொழிகளை சாராததாக இருக்க வேண்டும். தனித்து இயங்கும் ஆற்றல் அந்த மொழிக்கு இருக்க வேண்டும். இந்த வரையறைகளைப் பூர்த்தி செய்யும் மொழிகள் செம்மொழிகளாக விளங்கும்.
உலகின் பழைமையான செம்மொழிகளாக, தமிழ், சமஸ்கிருதம், ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், சீனம் ஆகிய ஆறு மொழிகள் அறியப்படுகின்றன.
ஆனால் இந்திய ஒன்றிய அரசு தமிழை செம்மொழியாக கடந்த 2004-ஆம் ஆண்டுதான் அறிவித்தது. அந்த ஆண்டு நடந்த நாடாளுமனறத் தேர்தல் அறிக்கையில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு தேவையான முயற்சிகள் எடுக்கப்படும் என திமுக அறிவித்தது. அதன் படி தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவை அமைந்தபோது அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இந்தியாவில் ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அந்த மொழி ஆயிரம் ஆண்டு பழைமையானதாக இருக்க வேண்டும். அந்த மொழியின் தொடக்ககால இலக்கியங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற வரையறைகள் உண்டு. அதன் அடிப்படையில் 2004-ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டம் ஒன்றில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற நிகழ்வுகள்

1508 – புனித ரோமப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றார்.
1644 – கின் அரசமரபின் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின.
1752 – மாஸ்கோவின் மூன்றில் ஒரு பங்கு தீயினால் அழிந்தது. 18,000 வீடுகள் சேதமடைந்தன.
1761 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் தெரிந்தது.
1808 – நெப்போலியனின் சகோதரர் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னர் ஆனார்.
1832 – பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
1844 – கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.
1859 – குயின்ஸ்லாந்து – புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸிலிருந்து பிரிந்தது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிஸ் நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.
1882 – அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் மும்பையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.
1930 – இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.
1971 – சோயுஸ் 11 ஏவப்பட்டது.
1974 – சுவீடனில் நாடாளுமன்ற முடியாட்சி அமைக்கப்பட்டது.
1981 – இந்தியாவில் ரயில் பெட்டிகள் பகுமதி ஆற்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1984 – இந்திய இராணுவத்தினர் அம்ரீத்சர் பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் உயிரிழந்தனர். 335 பேர் காயமுற்றனர்.
1993 – மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது.
2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.