சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு புதிய அறிவிக்கை வெளியிடலாம் -உச்சநீதிமன்றம்
தீர்ப்பில் விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்கள்
புதுதில்லி: சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்துக்கான புதிய அறிவிப்பணையை நெடுஞ்சாலைத் துறை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
சென்னை- சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு
வழக்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- பொதுவாக திட்டங்களுக்கு மத்திய,மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்த உரிமை உள்ளது. சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை இல்லை.
- சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும். இதற்காக கையகப்படுத்திய நிலங்களை திருப்பி விவசாயிகளிடம் தர வேண்டும்.
- சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கான புதிய அறிவிக்கையை நெடுஞ்சாலை துறை வெளியிடலாம். புதிய அறிவிக்கை. வெளியிட்ட பிறகு 8 வழி சாலை திட்டத்தை தொடரலாம்.
- சென்னை-சேலம் 8வழிச்சாலை திட்டத்துக்கு முறைப்படியாக சுற்றுச்சூழல் அனுமதிபெற வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதியின்றி திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.
- இத்திட்டம் குறித்து மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும்.
இவ்வழக்கில் அரசுக்கு சாதகமாக சில அம்சங்களும், விவசாயிகளுக்கு சாதகமாக சில அம்சங்களும் இடம்பெற்றுள்ளதை அடுத்து சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு புதிய அறிவிக்கை வெளியிடப்படும் சூழலில் பாதக அம்சங்களை முன்வைத்து விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.
You must log in to post a comment.