சூப்பர் ஃபிளவர் மூன்!
சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் தோன்றிய சூப்பர் பிங்க் மூன் காட்சி மீண்டும் இன்று (வியாழக்கிழமை ) சூப்பர் ஃபிளவர் மூனாக இந்தியாவில் தெரிந்தது.
சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது?
ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றிவரும் நிலவு வரும் 7-ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. அதனால், அன்று நிலவு மிகப் பெரியதாக நம் கண்களுக்குத் தெரியும். அதைத்தான் நாம் சூப்பர் மூன் என்கிறோம்.
சுழற்சிப் பாதையில் நிலவின் சராசரி தூரம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 403 கி.மீ. நீள் வட்டப் பாதையில் அது சுற்றி வருவதால் குறைந்த தூரத்திலும், நீண்ட தூரத்திலும் அது சுற்றுகிறது. அதன் நீண்ட தூரம் 4 லட்சத்து 5 ஆயிரத்து 500 கி.மீ. அது கிட்ட நெருங்கி சுற்றும்போது அதன் தூரம் 3 லட்சத்து 63 ஆயிரத்து 300.
எப்போது பார்க்கலாம்?
வியாழக்கிழமை மாலை 4.15 மணிக்கு சூப்பர் மூன் உச்சபட்ச ஒளியை எட்டும் என நாசா தெரிவித்திருந்தது. இந்த நிகழ்வு ஏற்படும்போது பூமியில் மலர்கள் பூத்துக்குலுங்கும் நேரம் என்பதால் சூப்பர் ஃப்ளவர் மூன் எனப் பெயரிடப்பட்டது.
அடுத்த சூப்பர் மூன் எப்போது?
அடுத்த, சூப்பர்மூன் 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.