சுப்பிரமணிய சிவா நினைவு நாள்

சுப்பிரமணியசிவா 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்தவர். சிறந்த மேடைப்பேச்சாளர்  சிறந்த இதழாளர்; 1913-இல் ஞானபாநு இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருடனும், மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர்.

சிறப்பு நாள்

எகிப்து – புரட்சி நாள் (1952)
லிபியா – புரட்சி நாள்
பப்புவா நியூ கினி – நினைவு நாள்

பிற நிகழ்வுகள்

1793 – புரூசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்ஸ் நகரைக் கைப்பற்றினர்.
1829 – ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சு இயந்திர காப்புரிமத்தைப் பெற்றார்.
1840 – கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

1914 – ஆஸ்திரியாவின் இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆத்திரியா-அங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதையடுத்து ஜூலை 28, 1914-இல் முதலாம் உலகப் போர் தொடங்கியது.

1925 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா மறைவு. (பிறப்பு. 1884)

1929 – இத்தாலி அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்தது.
1942 – நாசி ஜெர்மனியரினால் போலந்தில் டிரெப்லின்கா வதை முகாம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டது.
1952 – எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜெனரல் முகமது நக்கீப் தொடங்கினார்.

1957 – இந்திய அரசியல்வாதி பெ. வரதராஜுலு நாயுடு மறைவு (பி. 1887)
1961 – நிக்கரகுவாவில் சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.
1962 – லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கையெழுத்திடப்பட்டது.
1967 – அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சேர்ந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர்.
1970 – ஓமனின் காபூஸ் அவரது தந்தை சாயிட் பின் தாமூரின் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் சுல்தானாகப் பதவியேற்றார்.

1975 – தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா பிறந்த நாள்.
1983 – இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள-பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தொடங்கியது.
1988 – பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962-ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய ராணுவத் தளபதி நெவின் பதவியைத் துறந்தார்.
1992 – ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.
1995 – ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னர் வானில் தெரிந்தது.
1999 – மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.
2005 – எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.