வானில் நிகழும் அற்புதம்!

சென்னை: இவ்வாண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை நிகழவுள்ளது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நிகழவுள்ள இந்த கிரகணம் பெணும்பிரல் சந்திர கிரகணம் (penumbral lunar eclipse) வகையைச் சேர்ந்தது. இதை ஸ்டாபெர்ரி கிரகணம் எனவும் அழைப்பதுண்டு.
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய ஒளி நிலவின் மீது படாது. அப்போது நடுவில் உள்ள பூமி மறைத்துக் கொள்வதால் அதன் நிழல் சந்திரனில் விழுகிறது. இதுதான் சந்திர கிரகணம் என்பது எல்லோரும் அறிந்ததே.
சந்திர கிரகணத்தில் 3 வகைகள் உள்ளன. முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், பெணும்பிரல் சந்திர கிரகணம் (penumbral lunar eclipse). பூமியின் புற நிழல் வழியாக சந்திரன் நகரும்போது ஏற்படும் கிரகணத்துக்குத்தான் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சந்திரனின் 57 சதவீதப் பகுதி பூமியின் புற நிழலுக்குள் செல்லும்போது சந்திரனின் வண்ணம் சற்று வித்தியாசமாகத் தெரியும் வாய்ப்பு உள்ளது.
ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் இந்திய நேரப்படி இரவு 11.15 முதல் அதிகாலை 2.34 மணி வரை இந்த சந்திர கிரகணம் தெரியும். பூமியின் புற நிழல் சந்திரனை முழுமையாக 12.54 மணிக்கு விழும்.
வானம் தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இந்தக் கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும். இதேபோன்றதொரு கிரகணம் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நிகழ்ந்தது. இவ்வாண்டில் மேலும் இரு சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன. அடுத்து ஜூலை மாதமும், அதையடுத்து நவம்பர் மாதத்திலும் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.