கோயில்கள் எதற்காக? (video)
வேலூர்: வேலூரை அடுத்த திருமலைக்கோடியில் ஸ்ரீநாராயணி பீடம் அமைந்துள்ளது. இதை ஸ்ரீசக்தி அம்மா நிறுவியுள்ளார். பல சமூக தொண்டுகளை தொடர்ந்து ஆற்றி வரும் சக்தி அம்மா, இறை வழிபாட்டில் ஈடுபட்டுள்ள ஆன்மிக பெருமக்களுக்காக ஸ்ரீபுரம் என பெயரமைத்து சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயிலை நிறுவியுள்ளார்.
அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு நிகரான அழகு மிளிரும் இத்திருக்கோயில் முழுவதும் சுமார் 1500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகம், உள்மண்டபம், வெளிப்பிராகரம் என தங்கத் தகடுகளால் வேயப்பட்ட இத்திருக்கோயில் 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி பக்தர்களின் வழிபாட்டுக்காக குடமுழுக்கு நடத்தப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது.
பொற்கோயிலில் நாராயணி அம்மன் பொற்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இதைத் தவிர மூலவர் நாராயணி அம்மன் வைர, வைடூரியங்களால் ஆன பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு நேரில் காட்சியளிப்பது போன்ற தோற்றத்தில் அமர்ந்திருப்பது வேறு எங்கும் காணக் கிடைக்காத அற்புதக் காட்சி.
திருக்கோயிலுக்கு வேலூர் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள், ஆட்டோக்கள் செல்கின்றன. அத்துடன் திருப்பதி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் திருக்கோயிலுக்கான பேருந்து வசதி உள்ளது. மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ள இத்திருக்கோயிலுக்கு நாள்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நட்சத்திர வடிவ பாதையை வலம்வந்து நாராயணி அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
பீடத்தின் நிறுவனரான ஸ்ரீசக்தி அம்மா நாள்தோறும் பூஜை, வழிபாடுகளில் கவனம் செலுத்தினாலும், நாள்தோறும் பக்தர்களை சந்திப்பதில் தவறுவதில்லை. அவர் அண்மையில் கோயில்கள் எதற்காக? என்ற தலைப்பில் வழங்கிய அருளுரையை விடியோ வடிவில் கேட்டு மகிழுங்கள்.
You must log in to post a comment.