தன்னார்வலர்கள் 10 நாள்களுக்கு ஒருமுறை கொரோனா டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும்

சிறப்பு அதிகாரி ஜே. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்


சென்னை: தன்னார்வலர்கள் அனைவரும் 10 நாள்களுக்கு ஒரு முறை தாமாக முன்வந்து கொரோனா நோய்த்தொற்றுக்கான டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் இதுதொடர்பாக அளித்த பேட்டி:
தற்போது வீடுவீடாகச் சென்று கொரோனா நோய்த் தொற்று அறிகுறி பரிசோதனை நடத்தப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
கட்டாயமாக அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சிலர் பேசும்போது முகக் கவசத்தை கீழே இறக்கிவிட்டு பேசுவது தவறு. அதிகாரிகள் உள்பட அனைவரும் பேசும்போது கூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
சென்னையில் யாருக்காவது மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி, தொடர் இருமல் போன்ற அறிகுறிகள் இருப்போர் தாமாக பரிசோதனை செய்துகொள்வதற்கு முன்வர வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்புத் தேவை எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.