விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைந்த 2 நாசா வீரர்கள்


நியூயார்க்: விண்ணுக்கு ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நாசா வீரர்கள் இருவர் பத்திரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு பத்திரமாக சென்றடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் நாசா வீரர்கள் இருவர் விண்ணில் சுற்றி வரும் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர் பயணம் செய்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் (crew dragon) தற்போது விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா கென்னடி ஸ்பேஸ் சென்டர் காம்ப்ளக்ஸ் 39ஏ-வில் இருந்து இரு நாசா வீரர்களுடன் பல்கான் 9 ராக்கெட் புறப்பட்டது. 18 மணி நேர பயணத்தை முடித்துக் கொண்ட இரு வீரர்களும் விண்வெளி ஆராய்சசி மையத்தை பத்திரமாக சென்றடைந்தனர்.
ராக்கெட் ஏவப்பட்டதும் முதல் 8.5 நிமிடத்தில் க்ரூ டிராகன் பகுதி விண்வெளியில் குறிப்பிட்ட வட்டப் பாதையை அடைந்தது. அதைத் தொடர்ந்து க்ரூ டிராகன் பூமியை தொடர்ந்து சுற்றி வந்தது.
ஜப்பானுக்கு உயரே சர்வதேச விண்வெளி மையம் சென்றபோது, க்ரூ டிராகன் நெருங்கியது. அப்போது க்ரூ டிராகனில் உள்ள எஞ்சின் இயக்கப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தை மெல்ல நெருங்கி இணையத் தொடங்கியது. இரவு 8 மணியளவில் முழுமையாக க்ரூ டிராகன் இணைந்ததை அடுத்து அதில் பயணம் செய்த வீரர்கள் பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தினுள் சென்றனர். அவர்களுக்கு முதல்கட்ட சோதனைக்குப் பிறகு இருவரும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து தங்கள் ஆராய்ச்சிப் பணிகளை தொடங்குவர்.

தற்போது விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றுள்ள வீரர்கள் பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் ஏற்கெனவே விண்வெளி பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சில வாரங்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்வர் எனத் தெரிகிறது.
அமெரிக்கா 2001 ஜூலை 8-இல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிய பிறகு இப்போதுதான் மீண்டும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்புகிறது. 9 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதோடு, அமெரிக்காவில் இருந்து முதன்முறையாக விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய தனியார் நிறுவனம் என்ற சிறப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.