விண்ணோடம் சூரிய குடும்பத்தைத் தாண்டி சாதனைப் படைத்த நாள்
பிற நிகழ்வுகள்
1871 – லாப்ரடோரில் சூறாவளி தாக்கியதில் 300 பேர் பலியாகினர்.
1881 – ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
1886 – பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீக்கிரையானது.
1886 – பாவாரியாப் பேரரசர் இரண்டாம் லுட்விக் மியூனிக்கின் ஸ்டார்ன்பேர்க் ஆற்றில் இறந்துகிடந்தார்.
1917 – முதலாம் உலகப் போர்: லண்டன் நகர் மீது ஜெர்மனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உள்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.
1925 – சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிடம் அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்துக்கு அனுப்பினார்.
1934 – ஹிட்லரும், முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பறக்கும் குண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.
1948 – மலேஷியாவில் மலேயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தடை செய்யப்பட்டது.
1952 – சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
1955 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1978 – இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்.
1983 – பயோனியர்-10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்ணோடமானது.
2006 – நியூ ஹரைசன்ஸ் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது.
You must log in to post a comment.