நடிகர் திலகம் சிவாஜி மறைந்த நாள்

திரைப்பட உலகில் வரலாறு படைத்த நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி  ஆகும்.  மறைந்த திமுக தலைவர் மு. கருணநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி  என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அவர். அதற்கு முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரது நடிப்பாற்றலைக் கண்டு தந்தை பெரியார் அவரை சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அன்று முதல் அப்பெயர் அவருக்கு நிலைத்து நின்றது.

‘சிவாஜி’ கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 9 தெலுங்கு திரைப்படங்கள், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகிய சிறப்புகளைக் கொண்ட அவர் பிறவிக் கலைஞராக, உலகம் போற்றும் நடிகராக வலம் வந்தார். நடிகர் திலகம்நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டவர். அவர் நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜராஜசோழன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் அவர் பேசும் வசனத்திற்காக ரசிகர்களால் பல முறை பார்க்கப்பட்ட படங்களாக அமைந்தன.

வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்தவர். அத்தலைவர்களின் பெயரைச் சொன்னால் சிவாஜியின் உருவம்தான் நெஞ்சில் எழும். அவர் நடித்து வெள்ளி விழா கண்ட படங்கள் பல.

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த அவர், 1961 முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982-இல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரானார். 1987-இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதில் இருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார்.  பின்னர் அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

சிறப்பு நாள்

பெல்ஜியம் – தேசிய நாள்
பொலீவியா – மாவீரர் நாள்
குவாம் – விடுதலை நாள் (1944)
சிங்கப்பூர் – இன சமத்துவ நாள்

பிற நிகழ்வுகள்

கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்து அழிக்கப்பட்டது.
1545 – ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதற்தடவையாக பிரெஞ்சுப் படைகள் தரையிறங்கின.
1718 – ஒட்டோமான் பேரரசுக்கும், வெனிஸ் குடியரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
1774 – ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தன.
1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வெர்ஜீனியாவில் மனாசஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தன.
1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1961 – நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.
1964 – சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும், சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.
1969 – நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.
1972 – வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.

2001 – நடிப்பின் இலக்கணமாகத் திகழ்ந்த சிவாஜி கணேசன் மறைந்த நாள்
2007 – ஹரி பாட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.