தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகராக விளங்கும் சிரஞ்சீவிக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து கடந்த 5 நாள்களாக தன்னை சந்தித்து வந்தவர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்துகொள்ள நடிகர் சிரஞ்சீவி கேட்டுக் கொண்டுள்ளார்.

சிரஞ்சீவி தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் அவருக்கு இணையாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

சிரஞ்சீவியின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆச்சார்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.  
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 9 ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவிருந்தது.

இச்சூழலில் படப்பிடிப்புக்கு முன்னர் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினருக்கு கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னை சந்தித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனை செய்துகொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.