சாத்தான்குளம் சம்பவம்: மேலும் 5 போலீஸார் கைது

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸார் தாக்கியத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தை, மகன் இறப்பு விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்காக மாற்றி தொடர்புடைய 5 காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

சம்பவம் நடந்த நாளில் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் 14 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணை செவ்வாய்க்கிழமை மாலையில் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதையடுத்து 5 பேரும் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.