சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகளும், தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கியது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ்,  அவர் மகன் பெனிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடையைத் திறந்து வைத்ததற்காக விசாரணைக்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.  அதைத் தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டனர். ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை செய்தது. இதையடுத்து தில்லி சிபிஐ அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி மாலை வழக்குப்பதிவு செய்தனர்.  விசாரணை அதிகாரியாக தில்லி சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர்  விஜயகுமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் தில்லியில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதுரை வந்தனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு மாலையில் சென்றனர்.  அங்கு சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் முன்னிலையில், வழக்கு ஆவணங்களை துணை காவல் கண்காணிப்பாளர் அனில்குமார்

சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லாவிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து சாத்தான்குளத்தில் சிபிஐ தனது விசாரணையை இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Spread the love

மேலும் செய்திகள்

டிச.31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு:முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போதைய ஊரடங்கு இன்றுடன் முடிவு வரும் சூழலில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி […]

மலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்

ஜாக் என் ஜில் மலையாளப் படத்தில் இடம்பெற்ற கிம் கிம் பாடல். இப்படத்தில் மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இப்பாடலை மஞ்சுவாரியர் பாடியுள்ளார். இசை ராம் சுரேந்தர்.  எழுதியவர் பிகே. […]

பிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)

களத்தில் சந்திப்போம் என்ற புதிய படத்தில் இடம்பெற்ற பிரெண்ட்ஷிப் பாடல். இப்படத்தின் இயக்குநர் ராஜசேகர். ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் திரைப்படம். தயாரிப்பாளர் ஆர். பி. […]

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.