மதுரையில் மஹா சண்டி ஹோமம்
மதுரை, ஜூலை 9: உலக நலன் வேண்டி பாஜக மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகாசுசிந்திரன் தலைமையில் மஹா சண்டி ஹோமம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உலக மக்களைக் காக்க வேண்டி கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகராஜன் ஏற்பாட்டில் கிழக்கு தொகுதி மேற்கு ஒன்றியம் ஆலாத்தூரில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு இந்த யாகம் நடத்தப்பட்டது.
மாவட்டப் பொருளாளர் சந்திரபோஸ், ஒன்றியத் தலைவர் குட்டையன், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் மகாலிங்கம், அமைப்புசாராஅணி மாவட்ட தலைவர் அருண்குமார், இளைஞரணி மாவட்டத் தலைவர் சோலை மணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் திருமுருகன், அமைப்பு சாரா அணியின் மாவட்டப் பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must log in to post a comment.