கொரோனாவுக்கு அஞ்சாத சந்தை

மதுரை, ஜூலை 1: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டில் சமூக இடைவெளி இன்றி வாரச்சந்தையில் பொதுமக்கள் கூடினர். இதனால் கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அலங்காநல்லூர் ஒன்றியம் முடுவார்பட்டி ஊராட்சியில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.  இங்கு இருவருக்கு அண்மையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சூழலில் இப்பகுதியில் வாரச் சந்தை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மீண்டும் செயல்படத் தொடங்கிய வாரச் சந்தையில் கிராம மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக் கவசம் அணியாமல் திரண்டனர்.  இதனால் சந்தைக்கு வந்த பலர் அதிர்ச்சி அடைந்து பொருள்களை வாங்காமல் திரும்பினர். தமிழக அரசு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வரும் சூழலில் இத்தகைய சந்தைகளில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிடில் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கும் சூழல் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் இத்தகைய சந்தைகளை நடத்துவதைத் தடுப்பது அல்லது சந்தையில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதை உறுதி செய்வதற்கான உறுதியான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.