சபரிமலை ஆராட்டு விழா ரத்து

திருவனந்தபுரம்: சபரிமலையில் ஆராட்டு விழா கொரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 5-வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவின்போது மதவழிப்பாட்டு தலங்கள் மூடப்பட்டன. இருப்பினும் கோயில்களில் பூஜைகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நடைமுறை சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி முதல் கோயில்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் வரும் 14-ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்போது பக்தர்கள் அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அதேபோல் நிர்வாகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் தினமும் காலை 4  முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4  முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு, தந்திரி மகேஸ் மோகனரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கோயில் நடைதிறப்பு, பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்  குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் சுரேந்திரன்,  14-ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார்.

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை ஜூன் 14-இல் திறக்கப்பட்டு. 19-ஆம் தேதி வரை மிதுன மாத பூஜைகள் நடைபெறும். ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்படுகிறது என்றார் அமைச்சர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.