கொரோனா இல்லை சான்றிதழ் இருந்தால் மட்டுமே சபரிமலை கோயிலில் அனுமதி

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் இல்லை. அதே நேரத்தில் கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வாசு வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டியது கட்டாயம். அந்த சான்றிதழ் தரிசனத்திற்கு, 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

தாமதமாக தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கும், உடல் நலம் குன்றிய பக்தர்களுக்கும் நிலக்கல்லில் குறைந்த கட்டணமாக ரூ.625 நிர்ணயிக்கப்பட்டு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.. சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கெனவே முடிந்து விட்டது. 2021-ம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி வரை 86 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

Spread the love

மாஸ்டர் டீசர் பார்த்தீர்களா?

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.