ரோட்டரி சங்கம் சார்பில் கபசுர குடிநீர்
குடியாத்தம் : கொரோனா வைரஸ் நோய் குடியாத்தம் நகரில் பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில், குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி (ஜிஜிஜி) ரோட்டரி சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் 1.000 பேருக்கு கபசுர குடிநீர் புதன்கிழமை வழங்கப்பட்டது.
கங்கை அம்மன் கோவில் அருகில் கவுண்டன்ய மகாநதி ஆற்றங்கரையில் உள்ள தற்காலிக காய்கனி கடைக்கு வருகை தந்த பொதுமக்கள், வியாபாரிகள் என ஆயிரம் பேருக்கு சங்கத்தின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு சங்கத் தலைவர் ஏ.ஆர். (என்ற) ஏ.இராஜேந்திரன் தலைமை வகித்தார்.
ரோட்டரி ஆளுநர் (தேர்வு) ஜே.கே.என்.பழனி கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.
நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் கஸ்பா ஆர்.மூர்த்தி, ஜிஜிஜி
செயலாளர் முரளி, சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் கே. கோபிநாத், எம்.கோபிநாத், அரசு மருத்துவமனை மருந்தாளர் டி. ரவி, நிர்வாகிகள்
மாணிக்கம், விஜயகுமார், வினோத், தினா, சுந்தரம், விநாயகம், கணேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
You must log in to post a comment.