ஓய்வுபெற்ற மறுநாளே மரணடைந்த போலீஸ் கமாண்டன்ட்


சென்னை: சென்னை ஆவடி 2-ஆவது பட்டாலியனில் கமாண்டண்டாக இருந்த சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற மறுநாளிலேயே மரணமடைந்தார்.
சுப்ரமணியன் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். ஆவடி ஆயுதத் தொழிற்சாலையை அடுத்த கொல்லுமேடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு மே1-இல் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அவரது இறுதிச் சடங்குகள் 2-ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் பங்கேற்க நடைபெற்றது.
பட்டாலியனில் அவர் நாள்தோறும் காலையில் நடக்கும் அணிவகுபபில் தவறாது பங்கேற்பவர். பேட்மின்டன் விளையாடுவதில் ஆர்வம் காட்டியவர். எல்லோரிடமும் இனிமையாக பழகும் குணமுடையவர் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக காவல்துறையில் 1987-இல் உதவி ஆய்வாளர் பணியைத் தொடங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவர் கமாண்டண்டாக ஆவடி 2-ஆவது பட்டாலியனில் பணியாற்றி வந்துள்ளார் என்றும் பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் கூறினர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.