உழவர் சந்தையில் விவசாயிகள் முகக் கவசம் அணிவது கட்டாயம்
வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் அறிவுரை
வேலூர், ஜூன் 29: உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் ஜி. செந்தில்குமார் கேட்டுக் கொண்டார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் காட்பாடி உழவர் சந்தையில் உள்ள விவசாயிகளுக்கு காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் முகக் கவசங்களை உதவி ஆணையாளர் ஜி.செந்தில்குமார் வழங்கினார்.
அப்போது அவர், விவசாயிகள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து கொண்டுதான் வியாபாரம் செய்ய வேண்டும் அதே போல் காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து தான் வரவேண்டும். முகக் கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருள்கள் எதையும் விற்பனை செய்யக் கூடாது என விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.
நிகழ்வுக்கு காட்பாடி ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தலைமை தாங்கினார். வேலூர் மாநகராட்சியின் சுகாதார அலுவலர் பி.பாலமுருகன், மேற்பார்வையாளர் டேவிட், காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், ஆயுள் உறுப்பினர் வி.காந்திலால்பட்டேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மாநில ரெட்கிராஸ் கிளையின் தலைவர் ஹரிஷ் எல் மேத்தா, மாநில பொருளாளர் மற்றும் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் சி.இந்தர்நாத் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாநில அமைப்பினால் வழங்கப்பட்ட முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
காட்பாடி உழவர் சந்தையின் வேளாண் அலுவலர் மீனாபிரியா, உதவி வேளாண் அலுவலர்கள் சித்ரா, ஜெகதீஸ்வரன், வினோத் ஜுனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் ஜி.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி, முன்னாள் பொருளாளர் ஜான்சன் வசந்த குமார், தன்னார்வத் தொண்டர்கள் கே.சி.வி.கதிரேசன், செ.ஜ.சோமசுந்தரம், ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள் அவர்களின் உதவியாளர்கள் என 300 பேருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

You must log in to post a comment.