காவலர்களுக்கு ஆப்பிள் பழங்கள் விநியோகம்

வேலூர்: கரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் ஆப்பிள் பழங்கள், குளிர்பான பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜுலை 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சார்பில் இரண்டாயிரம் ஆப்பிள் பழங்கள், குளிர்பான பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக காட்பாடியில் நடைபெற்ற நிகழ்வுக்கு காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.துரைபாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார். துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்து பேசினர்.
கரோனா நோய் தடுப்பு பணியில் உள்ள காவலர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கு ஆப்பிள், குளிர்பான பாக்கெட்டுகளை செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வழங்க துணை கண்காணிப்பாளர் கே.துரைபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
பிஎஸ்என்எல் மாவட்ட உறுப்பினர் மற்றும் அஇஅதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு,  துர்கா மஹால் சுரேஷ், போஸ், S.P.ராகேஷ்,  டில்லி ராமன், J.P.யுவராஜ், மோகன், C.T.O. சண்முகம், ராஜ்கமல், அமர்நாத்,சுரேந்தர், மற்றும் நண்பர்கள், ஆயுள் உறுப்பினர் எ.ஆனந்தகுமார், தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், எஸ்.மோதகப்பிரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியன் ரெட்கிராஸ் தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, மாநில பொருளாளர் மற்றும் மாவட்ட செயலாளர் சி.இந்தர்நாத் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் வழங்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.