காட்பாடி ரெட்கிராஸ் செயலாளர், துணைத் தலைவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

காட்பாடி: காட்பாடி ரெட்கிராஸ் செயலர் செ.நா.ஜனார்த்தனன், துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோரின் சமூக சேவையை பாராட்டு மதிப்புறு முனைவர் பட்டத்தை நியூ ஜெருசலம் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழங்கியுள்ளது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறந்த சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா நியு ஜெருசலம் பல்கலைக் கழக மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் ஆண்டுதோறும் வழங்கி கௌரவித்து வருகிறது.

50-ஆம் ஆண்டையொட்டி காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் செயலாளரும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளருமான காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், துணைத்தலைவர் மற்றும் குமரன் மருத்துவமனையின் மேலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோரின் தன்னார்வ தொண்டினையும், சமூக சேவையையும் பாராட்டும் வகையில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

விழா வேலூர் பாகாயத்தில் உள்ள பல்கலைகழக அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு நியு ஜெருசலம் பல்கலைக் கழகம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வேந்தர் எஸ்.சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.  மாநில  மனித உரிமை கழகத்தின் மாநிலத்தலைவர் வி.எம்.பாலாஜி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி பேசினார்.

திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் பிரகாஷ்ராஜன், ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் கே.பாண்டியன் ஆகியோர்  விருந்தினர்களாக பங்கேற்றனர். வேலூர் சன் சிடி ரோட்டரி சங்கத்தின் செயலாளர் வை.அருணகிரி, பொருளார் சிவப்பிரியா, துளிர் பள்ளி தலைமையாசிரியை த.கனகா, காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் பொருளாளர் வி.பழனி, ஆயுள் உறுப்பினர்கள் வி.காந்திலால்படேல், எ.ஆனந்தகுமார், தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், செ.ஜ.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எஸ்.ராதிகா,எஸ்.விமலி, எஸ்.தீபக், மேலாளர் எஸ்.சிவபிரியா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். முடிவில் ஆசிரியை முனைவர் எஸ்.ஸ்டெல்லா நன்றி கூறினார்.

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் செயலாளர் செ.நா. ஜனார்த்தனன், துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், நடிகர் பிரகாஷ்ராஜன், எ.நவகோட்டி, எஸ்.ரமேண், ஆர்.மகேந்திரன், கே.பாலய்யா, எம்.சுரேண், ஆர்.சுரேண், எச்.அசீம்செரீப், டி.வெங்கடேசன், நார்க்கோயில் எ.சலீம், எம்.ராமகிருஷ்னசாஸ்திரி, டி.சௌந்தர்ராஜன், ஜி.பரத்குமார், டி.அருனாசலம் ஆகியோர் மதிப்புறு முனைவர் பட்டம் (Doctor of Letters Honoris Causa) வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.