ரேஷன் கடைகளில் எம்எல்ஏ ஆய்வு

மதுரை: ரேஷன் கடைகளில் மதுரை மத்திய தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார். அத்துடன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

ஏ.ஏ. ரோடு, ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி, எஸ்.எஸ். காலனி ஜானகி நாராயணன் தெருவில் அமைந்துள்ள பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி ,வார்டு எண் 84 தானப்ப முதலி தெருவில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர் பண்டகசாலை ஆகிய கடைகளில் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர், தனது சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். வார்டு 86-இல் ரூ.8.20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும், வார்டு 78 மேலவாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி சுற்றுச்சுவரையும். வார்டு 77 ஜெ.ஆர். ரோடு பகுதியில் ரூ.4.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல், வார்டு 77 இராமலிங்க நகரில் ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.