பள்ளியை சீரமைத்த ரஜினி மன்றத்தினர்
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் அருகே இடையபட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியை, மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் இடையபட்டி ரஜினி மன்றத்தினருடன் இணைந்து சீரமைத்தனர்.
சீரமைக்கப்பட்ட பள்ளியை பயன்பாட்டுக்கான அர்ப்பணிப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. இதில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளும், நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி துணைச் செயலர் சீமான் செல்லத்துரை தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணிச் செயலர் காமாட்சி முன்னிலை வகித்தார்.
மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி முகமது ரபீக் பள்ளியை திறந்து வைத்தும், 200 பேருக்கு கொரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ஜெயவீரக்குமார், ஒன்றியச் செயலர் விஜயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பாண்டியன், ஒன்றியச் செயலாளர் கருப்பையா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் விஸ்வநாதன், ராஜதுரை, அய்யூர் ராஜ், மாவட்ட துணை செயலர் சேகர், இராசபாண்டி, அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியை விக்டோரியா ராணி நன்றி கூறினார்.
You must log in to post a comment.