வைரலாகும் ரஜினி தனது மனைவியுடன் நடித்த படம்


சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் சினிமாவில் நடித்த விடியோ காட்சி சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. ரஜினி ரசிகர்கள் இதற்கு லைக் செய்து வருகின்றனர்.
திரைப்பட உலகில் 40 ஆண்டுகளைக் கடந்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி, தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். கொரோனா ஊரடங்கு நிறைவடைந்ததும், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்நிலையில், ரஜினி தனது மனைவி லதா ரஜினிகாந்த் நடித்த அக்னி சாட்சி படத்தில் இடம்பெற்ற ரஜினி – லதா ரஜினிகாந்த் விடியோ சமூக ஊடகங்களில் ரஜினி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.